உள்ளத்துக்கு எழுச்சித் தரும் உணவு
வாழைப்பழம், காளான், உருளைக்கிழங்கு -இவை மூன்றையும் உள்ளத்திற்கு எழுச்சித் தரும் உணவுகள் என அழைக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். மேற்கண்ட மூன்று உணவுகளிலுமுள்ள வைட்டமின் பி-6-ம்,பொட்டாசியமுமே மனக்கவலையை மாற்றி உள்ளத்திற்கு எழுச்சித் தருகிறது. நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம், உருளைக்கிழங்கு போன்றவற்றைத் தவிர்ப்பார்கள். இவர்கள் காளான் சூப்புடன் சோயாபீன்சை சுண்டலாக ஒரு கப் சாபிடலாம். 5அவாகோடா பழமும் சாப்பிடலாம். மனக்கவலையை அகற்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் மேற்கண்ட உணவுகள் தருகின்றன.
மன இறுக்கத்தை அகற்ற...
தசை, நரம்பு மண்டலம்,செரிமானம், இதயம் - இந்த நான்கும் நன்கு இயங்க,தயாபின், ரத்த அணுக்களும் திசுக்களும் உருவாக, சக்தியை புதுப்பித்துக் கொள்ள வைட்டமின்-12 போன்றவை கிடைக்க ரொட்டித் துண்டுகளை சாப்பிட்டு வரலாம். ரொட்டிதுண்டுகளை வெண்ணை, ஜாம் இல்லாமல் சாப்பிட்டால் மிக சிறந்த சக்திமிக்க உணவாக அமையும். அதேபோல் சோர்வை அகற்றி வளர்ச்சிக்கும், மன இறுக்கத்தை அகற்றி நோயை குணமாக்கும் இரும்புச் சத்து, மத்திய நரம்புமண்டலம் சுறுசுறுப்பாகவும், வளர்சிதைமாற்றம் சீராக இருக்கவும், மற்றும் நியாசின் வைட்டமினும் ரொட்டித்துண்டுகளில் உள்ளன. நரம்புகளுக்கு வலுவும் தந்து உடலைப் பெருக்காமல் பார்த்துக்கொள்ளும் கால்சியம், எளிதில் ஜீரணமாக உதவும் நார்ச்சத்தும் இந்த ரொட்டித் துண்டுகளில் உள்ளன. ரொட்டிதுண்டுகளில் வெண்ணை, ஜாம் சேர்த்து சாப்பிட்டால் உடல் பருமனாகும். அதற்குப் பதிலாக பாலில் நனைத்துச் சாப்பிடலாம். ரொட்டியில் நார்ச்சத்து இருப்பதால் நீண்டநேரம் பசிஎடுக்காது. நல்ல புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள்.
குழந்தைகளின் புத்துணர்ச்சிக்கு...
குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்காவிட்டால் அவர்கள் பல்வேறு நோய்களின் பிடிகளுக்கு உள்ளாக நேரிடலாம். பொதுவாக சிறிய குழந்தைகள் வயிற்றுப்போக்கு, பேதி போன்றவற்றால் அவதிப்படுவதைப் பார்த்திருப்போம். அவ்வாறு அவர்கள் பாதிக்கப்பட்டால் துத்தநாக உப்புள்ள உணவு மற்றும் மருந்தை கொடுத்தால் அந்தக் குழந்தை உடனே புத்துணர்வுபெறும். மேலும் இது ஆண்டிபயாடிக்காகவும் உடலில் செயல்படுகிறது. பழங்களுடன் காய்கறிகளும் நன்கு சேர்த்துக்கொண்டால் அவர்கள் உடலில் துத்தநாக உப்பு குறைவாகவே இருக்கும்.நாரில் உள்ள பைட்டிக் அமிலம், துத்தநாக உப்பை உறிஞ்சி வெளியேற்றிவிடும். எனவே டாக்டரின் ஆலோசனைப்படி துத்தநாக உப்பை, மாத்திரை அல்லது உணவாகச் சாப்பிடலாம். வாரம் இரண்டு நாட்கள் கடல் உணவு சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் துத்தநாக உப்பு கிடைத்துவிடும். தொற்றுநோய், ஜலதோசம் முத்லியன உடலில் துத்தநாக உப்பு குறைவாக இருப்பதன் அறிகுறியாகும். வாரம் இருநாட்கள் அவித்த மீனைச் சாப்பிடுவதால் மிகவும் எளிதாக துத்தநாக உப்பைப் பெறமுடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment